தலைப்புச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் இன்று முதல் பெரும் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை இன்று (23) முதல் அரசாங்கம் விலக்கிக் கொண்டுள்ளது.

இனி இவர்களுக்கு குறைந்தளவு பொலிஸ் உத்தியோகத்கள் மட்டுமே பாதுகாப்பு வழங்குவர்.

மேலும் ஒவ்வொரு 06 மாதங்களுக்கும் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் படி, இவர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் என்று, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

உயர் பாதுகாப்பு செலவினங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கபப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிக்காக வருடாந்தம் 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார்.

தொடர்பான செய்தி: முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு இனி முப்படையினர் இல்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்