
– அஹமட் –
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ‘முழக்கம் மஜீத்’ என அழைக்கப்படும் ஏ.எல். அப்துல் மஜீத் இன்று (19) காலமானார்.
நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த மஜீத், சாய்ந்தமருதிலுள்ள அவரின் வீட்டில் காலமானார்.
வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையின் உறுப்பினராகப் பதவி வகித்த அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினராவார்.
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக முன்னர் பதவி வகித்த பஷீர் சேகுதாவூத், அந்தப் பதவியிலிருந்து நிறுத்தப்பட்டதன் பின்னர், அந்த இடத்துக்கு முழக்கம் மஜீத் தெரிவு செய்யப்பட்டார்.
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்துக்கு வருகை தராத நிலையிலேயே, முழக்கம் மஜீத் அந்தக் கட்சியின் தவிசாளராகத் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9.00 மணிக்கு சாய்ந்தமருதில் நடைபெறும் என, ஊடகவியலாளர் ஹுதா உமர் – ‘புதிது செய்தித்தளத்துக்கு தெரிவித்தார்.
தொடர்பான செய்தி: மு.கா. தவிசாளராக முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம்



