தலைப்புச் செய்திகள்

இஸ்லாத்தை அவமதித்த வழக்கில், ஞானசார தேரருக்கு பிடியாணை

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அவதூறு வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு இன்று (19) ஆஜராகத் தவறியமையினை அடுத்து, அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட இந்த வழககின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை வழங்கப்பட இருந்தது. ஆனால் ஞானசார தேரருக்கு உடல்நலக்குறைவு காரணமாக அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என அவருடைய சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து தீர்ப்பை ஜனவரி 09ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக – நீதவான் பசான் அமரசேகர தெரிவித்ததோடு, ஞானசார தேரரை கைது செய்யுமமாறும், அடுத்த விசாரணைக்கு அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.