
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.8 பில்லியன் ரூபாய் வரியை பாக்கியாக செலுத்தாமல் உள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது
30 நொவம்பர் 2024க்குள் வரி பாக்கியை செலுத்துமாறு மதுபான உற்பத்தியாளர்களுக்கு கலால் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தாத வரியின் மொத்தத் தொகை 8.5 பில்லியன் ரூபாய் என கலால் திணைக்களம் கூறியுள்ளது.
வரி பாக்கியை செலுத்தத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.



