தலைப்புச் செய்திகள்

அரிசி பற்றாக்குறை செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சு குற்றச்சாட்டு

அரிசி ஆலை உரிமையாளர்கள், உள்ளூர் சந்தையில் ‘நாடு’ அரிசியின் பற்றாக்குறையை செயற்கையாக ஏற்படுத்தி, விலையை உயர்த்த முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.

நாட்டுக்குள் போதுமான அரிசி கையிருப்பு இருப்பதை உறுதி செய்த நுகர்வோர் விவகார அதிகார சபையன் அறிக்கையைத் தொடர்ந்து அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இப்பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

அரிசி விலை அதிகரிப்பு மற்றும் சில அரிசி வகைகளுக்கு குறிப்பிடத்தக்க தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரிசி விற்பனை 50% குறைந்துள்ளதாக மரதகஹமுல அரிசி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசியின் விலைகள் சமீபகாலமாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விலையை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக நாடு அரிசியின் விலை அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஜனாதிபதி ஒக்டோபர் 24ஆம் திகதியன்று முக்கிய அரிசி உற்பத்தியாளர்களுடன் ஒரு கூட்டத்தைக் கூட்டி, விலைகளைக் கட்டுப்படுத்துமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகார சபை நொவம்பர் 06ஆம் திகதி தேசிய ரீதியில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அரிசி பற்றிய தகவலை அறிக்கையாக சமர்ப்பித்தது.