
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் திங்கள்கிழமை (11) நள்ளிரவுடன் முடிவடைகிறது.
அதன்படி, திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் வியாழன் (14) வரை மௌன காலம் அமுலில் இருக்கும்.
இந்த காலகட்டத்தில், அனைத்து வகையான தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறும் எந்தவொரு தரப்பினரையும் கைது செய்வதற்கும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த நாட்களில் வாக்களிக்க முடியாத தபால்மூல வாக்காளர்கள் இன்றும் (07) நாளையும் (08) தமது பணியிடத்திற்கு அமைய மாவட்ட செயலகத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.



