டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானார்

🕔 November 6, 2024

மெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்படி, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

இதுவரையிலான முடிவுகளின்படி, ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் இதுவரை 279 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில், யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார்.

இறுதி தகவல்களின் படி டிரம்ப் 279 வாக்குகளைப் பெற்று (71,290,696 வாக்குகள் அதாவது 51%)வெற்றி உறுதியாகி விட்டது. முன்னதாக, அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியானபோது, அவர் புளோரிடாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.

கமலா ஹாரிஸ் – கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வசப்படுத்தியுள்ளார். அவர் இதுவரையிலும் 223 தேர்வாளர் குழு வாக்குகளை (66,209,999 வாக்குகள் அதுவது 47.4%) பெற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்