தலைப்புச் செய்திகள்

வாக்காளர் அட்டை விநியோகம், இன்று ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு தபால் திணைக்களம் ஏற்றுக்கொண்டுள்ளதாக, சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

வீடு வீடாக வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணி இன்று பல பகுதிகளில் தொடங்கியது.

எனினும் தாமதம் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் – நொவம்பர் 03ம் திகதி காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும்.