
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இம்மாதம் 14ஆம் திகதி தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.
இதனையடுத்தே, புதிய தலைவராக சிரேஷ்ட பேராசியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் கபில செனவிரத்ன, கல்விச் சமூகத்தில் மரியாதைக்குரிய நபராக உள்ளார். உயர்கல்வியில் உள்ள அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இவர் விழ நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்பான செய்தி: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் ராஜிநாமா: ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பேரில் நடந்ததாக தகவல்



