
முன்னாள் ராஜாங்க அமைச்சர் அனுர பஸ்குவல்-இன் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் – லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக – ஜனவரி 4, 2025 வரை அவரின் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கும்.
கொக்கல மற்றும் மத்துகம வங்கிக் கிளைகளிலுள்ள கணக்குகளை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அனுர பஸ்குவல், சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சராக பதவி வகித்திருந்தார்.



