தலைப்புச் செய்திகள்

உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு, முன்னாள் அமைச்சரகளுக்கு உத்தரவு

முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அரசு வழங்கிய உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து – உடனடியாக வெளியேறி, அவற்றினை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர்களுக்கு பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் நேற்று (27) அறிவித்தது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கு கிட்டத்தட்ட 50 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருந்தபோதிலும், அரசின் மாதிவெல வீடமைப்புத் தொகுதியில் வசிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தல் முடியும் வரையில் அங்கு தங்கியிருப்பதற்கு பொது நிர்வாக அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.