தலைப்புச் செய்திகள்

இம்தியாஸ், கபீர் ஆகியோருக்கு முக்கிய பதவிகள்

க்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக பதவி வகித்த சரத் பொன்சேகா, கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டமையின் காரணமாக, அவர் வகித்த தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.