பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிட வருமாறு, அதாஉல்லாவுக்கு ஹக்கீம் தூது

🕔 September 27, 2024

– மரைக்கார் –

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை, தங்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட வருமாறு – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தூது அனுப்பியுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிரமுகர் ஒருவர் ஊடாக, அதாஉல்லாவுக்கு இந்த அழைப்பை ஹக்கீம் விடுத்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா ஆதரவளித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்