
புதிய மாகாண ஆளுநர்களை – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் விவரம் வருமாறு:
மத்திய மாகாணம் – பேராசிரியர் சரத் அபேகோன் (முன்னாள் துணைவேந்தர், பேராதனைப் பல்கலைக்கழகம்)
தென் மாகாணம் – பந்துல ஹரிச்சந்திர (முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி)
வடக்கு மாகாணம் – நாகலிங்கம் வேதநாயகம் (யாழ்ப்பாணத்தின் முன்னாள் அரசாங்க அதிபர்)
சப்ரகமுவ மாகாணம் – சம்பா ஜானகி ராஜரத்ன
மேல் மாகாணம் – ஹனிப் யூசுப்
வடமேல் மாகாணம் – திஸ்ஸ குமாரசிறி
வடமத்திய மாகாணம் – வசந்த குமார விமலசிறி
கிழக்கு மாகாணம் – ஜயந்த லால் ரத்னசேகர
ஊவா மாகாணம் – கபில ஜயசேகர
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.



