
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜேபால நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் – தேசிய மக்கள் சக்தியின் தேசிய புத்திஜீவி அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஆவார்.
நீண்டகாலமாக ஜே.வி.பி தலைவரின் தனிப்பட்ட செயலாளராக இருந்த ஆனந்த விஜேபால, 2015 நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நிறுவப்பட்ட ஊழல் எதிர்ப்பு செயலகத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழுவிலும் இவர் அங்கத்துவம் வகிக்கின்றார்.



