தலைப்புச் செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்க அவதூறு தெரிவித்ததாக கூறி, ஹரினி எம்.பி 100 மில்லியன் ரூபாய் மானநஷ்ட வழக்குத் தாக்கல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி – தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று (11) அவர் மேற்படி அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

பிரதிவாதியான திஸ்ஸ அத்தநாயக்க, மாவனல்லையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால், அந்த அரசாங்கத்தில் கண்டி தலதா பெரஹர நிறுத்தப்படும் என பகிரங்கமாக கூறியதாக ஹரிணி அமரசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது பொய்யானது என்றும் இந்த அவதூறுக்கு எதிராகவே மான நஷ்ட வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தரணி ஷானிகா சில்வா ஊடாக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.