
ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (15) வேட்புமனுக்களை சமர்ப்பித்த 39 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட 03 ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்தார்.
இன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரையான காலப்பகுதியில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 22 வேட்பாளர்களும், மற்ற கட்சியைச் சேர்ந்த ஒருவரும், சுயேச்சை வேட்பாளர்கள் 16 பேரும் அடங்குவர்.
முற்பகல் 11.30 மணியுடன் முடிவடைந்த ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காலப்பகுதியில் – மூன்று ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதன்படி, வேட்புமனு தாக்கல் செய்த 39 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.



