தலைப்புச் செய்திகள்

சஜித்துக்கு ‘மொட்டு’ எம்.பி ஆதரவு என அறிவிப்பு

பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட சுதர்ஷினி, 89,329 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இவர் பிரதியமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.