
மனுஷ நாணயக்கார நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னர், அந்த வெற்றிடத்துக்கு – பந்துலால் பண்டாரிகொட நியமிக்கப்படுவார் என ஐக்கி மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
2020 பொதுத் தேர்தலில் காலி மாவட்டத்தில் 34,897 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்ற பண்டாரிகொட, ஐக்கிய மக்கள் சக்தியின் விருப்பு வாக்கு பட்டியலில் மனுஷவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
இதேவேளை, ஹரின் பெனாண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தமையை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு இன்னும் தீரமானம் எடுக்கப்படவில்லை எனவும் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
ஹரின் பெனாண்டோ – தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: ஹரின், மனுஷ கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது: எம்.பி பதவிகளை இழக்கின்றனர்



