தலைப்புச் செய்திகள்

தமிழர் தரப்பு பொது வேட்பாளராக, முன்னாள் எம்.பி அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டார்

லங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் – ஜனாதிபதித் தேர்தலில், தமிழர் தரப்பு பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பினர் – இன்று (08) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, இந்த முடிவை அறிவித்துள்ளனர். 

சிவில் அமைப்புகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும், 07 தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட்டிணைந்து – தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். 

இருந்தபோதிலும், தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை – ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.