தலைப்புச் செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது

லிட்ரோ எரிவாயு விலை இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 3,690 ரூபாயாகும்.

05 கிலோ எரிவாயு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,482 ரூபாய்.

இதேவேளை, 2.3 கிலோ எரிவாயுவின் விலை 18 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, புதிய விலையை 694 ரூபாயாக திருத்தப்பட்டுள்ளது.

அண்மையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலைகள் கணிசமாக குறைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.