
ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற – அக்கரைப்பற்றைச் சேர்ந்த 68 வயதான ஆதம்லெப்பை அப்துல் கபூர் என்பவர் உயிரிழந்துள்ளார் என, இலங்கை முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அக்கரைப்பற்று 06ஆம் குறிச்சி, முஸ்லிம் மத்திய கல்லூரி வீதியைச் சேர்ந்த மேற்படி ஹஜ் யாத்திரீகர் – மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இவரின் ஜனாஸா – மக்காவிலுள்ள மன்னர் அப்துல் அசீஸ் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்காவிலேயே உடலை நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




