திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல்

🕔 June 19, 2024

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமை – அவர்களின் பெறுபேறுகளைப் பாதிக்காது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19) தெரிவித்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட மாணவர்களின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் எழுபது மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் – பர்தா அணிந்திருந்த பெண்கள் பரீட்சைக்கு வரும்போது, பரீட்சை மண்டப விதிகளை கடைப்பிடிக்கும் வகையில் காதுகளை வெளிக்காட்டிக்கொள்ளாத காரணத்தினால் தாமதமாகியுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே, இது விடயமாக நாடாளுமன்றில் இம்ரான் மகரூப், றிசாட் பதியுத்தீன், ரஊப் ஹக்கீம் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – தமது கவலைகளையும் ஆதங்கங்களையும தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்