
லிட்ரோ எரிவாயு 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் சில்லறை விலையை 150 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (04) முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விலைக் குறைப்புக்குப் பின்னர் 12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய சில்லறை விலை ரூ. 3,790 ரூபாயாக அமையும்.
05 கிலோ எடையுள்ள எரிவாயு விலை 60 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை ரூ. 1,525 ரூபாய். 2.3 கிலோ கிராம் எரிவாயு விலை 28 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்து. புதிய விலை ரூ. 712 ரூபாயாகும்.



