
சப்ரகமுவ மாகாணத்தில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
1080 பாடசாலைகளில் இந்த ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சப்ரகமுவ மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சி தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 425 பாடசாலைகளிலுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி சாதாரண தரப் பாடங்களுக்கு 877 ஆசிரியர்களும், உயர்தரப் பாடங்களுக்கு 159 ஆசிரியர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.



