யோசித விவகாரத்தில், எந்தவொரு தலையீடும் கிடையாது: அமைச்சர் சாகல

🕔 February 7, 2016

Sagala Rathnayaga - 012முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித மற்றும் சி.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டம் உறுதியாகப் பின்பற்றப்பட்டுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இவ் விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரோ அல்லது வேறு அமைச்சர்களோ எவ்விதமான தலையீடுகளையும் மேற்கொள்வில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் சாகல ரத்னாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ் விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

சந்தேக நபர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி, அவர்களை திறம்பட விசாரணை செய்வதற்காக, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதித்துறையின் அனுமதியை நாடியிருந்தனர்.

இதேவேளை, சட்ட நடிவடிக்கைகளின் பொருட்டு விசாரணை அறிக்கையொன்று, சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படும்.

போலி ஆவணங்களை சமர்ப்பித்தமை, கம்பனி பதிவுச் சட்டத்தினை மீறியமை, அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் சுங்க சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 32 உப பிரிவு 109 (05) இன் கீழ், சந்தேக நபர்கள் மீது, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்