ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சம்பந்தன்

🕔 January 21, 2016

Sambanthan - 0987

ற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்று,  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமஷ்டி என்கிற அதிகார பரவலாக்கத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு  தலைமையேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே சமஷ்டிக் கோட்பாட்டை தந்தை செல்வா தலைமையில் முன்வைத்ததாகவும், அதனையே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

ஆயினும், தற்போது ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக் கொண்டதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவையெனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றம் மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்