அட்டாளைச்சேனை அறபாவில், வித்தியாரம்ப விழா; மாணவர்களும் கௌரவிப்பு
🕔 January 21, 2016



– றியாஸ் ஆதம், ஐ.ஏ. ஸிறாஜ் –
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
அறபா வித்தியாலய அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன்போது தரம் ஒன்றிற்கு புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களுக்கு அதிதிகளால் ஏடு துவக்கி வைக்கப்பட்டதுடன், கடந்த காலங்களில் கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களும் கொளரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ்களாக வெளியாகியுள்ள இப்பாடசாலை மாணவர்கள் இருவரும் அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், புதிதாக கடமையினைப் பொறுப்பேற்றுள்ள அதிபருக்கு, பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளரால் நிகழ்வில் வரவேற்பளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில், வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ.எல்.எம் காசீம், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ. கஸ்ஸாலி, உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எம் நியாஸி மௌலவி, ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Comments



