தலைப்புச் செய்திகள்

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு

இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள – எரிபொருள் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிருவாகத்தின் முதல் இரண்டு குழுக்களை இன்று (04) காலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சந்தித்துள்ளார்.

இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையில் ஈடுபடவுள்ள நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள 450 எரிபொருள் நிலையங்கள் வழங்கப்படவுள்ளன.

450 எரிபொருள் நிலையங்களும் 150 பேர் கொண்ட 3 தனித்தனி குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபடவுள்ளன.

ஜுன், ஜுலை மாதங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது விற்பனையை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளன.