லண்டன் பறந்தார் ரணில்

🕔 May 4, 2023

னாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு பயணித்துள்ளார்.

இன்று (04) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதியுடன் மேலும் எட்டு பேர் பயணித்துள்ளனர்.

மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு பிரித்தானியா பயணித்துள்ளார்.

எதிர்வரும் 6ம் திகதி லண்டன் நேரம் முற்பகல் 11.00 மணிக்கு முடிசூட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

டுபாய்க்கு சென்று அங்கிருந்து லண்டனுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்