தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரின் ராஜிநாமா, உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தாது: ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவிப்பு

🕔 January 26, 2023

– மப்றூக் –

ள்ளூராட்சித் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ராஜிநாமா செய்துள்ளமையானது – தேர்தலை நடத்துவதில் பாதிப்புக்களை செலுத்தாது என, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பிர் பி.எஸ்.எம். சார்ல்ஸ் நேற்று தனது பதவியை ராஜிநாமா செய்தமையினை அடுத்து, உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இது தொடர்பில் குறித்த உறுப்பினரிடம் பேசியபோதே, அவர் இந்தப் பதிலை வழங்கினார்.

தேர்தல் ஆணைக்குழுவில் உறுப்பினர் ஒருவரின் வெற்றிடம் ஏற்பட்டாலும், அவ்வாறான நிலைமையானது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை மற்றும் பொறுப்புக்களைப் பாதிக்காது எனவும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.

தலைவர் உறுப்பினர்கள் என தேர்தல் ஆணைக்குழுவில் மொத்தம் 05 பேர் உள்ளனர்.

இந்த நிலையில், ஆணைக்குழுவில் ஏதாவது தீர்மானங்களை எடுப்பதற்கான ‘கோரம்’ 03 எனவும் அந்த உறுப்பினர் விளக்கமளித்தார்.

தொடர்பான செய்தி: தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் ராஜிநாமா

Comments

புதிது பேஸ்புக் பக்கம்