தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் ராஜிநாமா

🕔 January 25, 2023

தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எஸ்.எம். சார்ல்ஸ் ராஜிநாமா செய்துள்ளார்.

இவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் என, ஜனாதிபதி செயலக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஜனவரி 25ஆம் திகதியிலிருந்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் விண்ணப்பங்களைக் கோருவதற்கு இன்று கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்