மின்வெட்டு பெப்ரவரி 17 வரை இல்லை: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணக்கம்

🕔 January 25, 2023

மின் வெட்டை இன்று (25) முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு – சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இன்று (25) பிற்பகல் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நிறைவடையும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரையில், நாட்டில் மின்வெட்டு முன்னெடுக்கப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் வெட்டை அமுல்படுத்தமால் இருக்க வேண்டுமாயின், 05 பில்லியன் ரூபா பணம் தேவைப்படும் என்றும், அதனை செலவு செய்ய அரசிடம் நிதி இல்லை எனவும் ஏற்கனவே அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்