ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எந்தத் தரப்பினருடனும் கூட்டணியமைத்துப் போட்டியிடவில்லை: பிரதித் தலைவர் நஸார் ஹாஜி உறுதிபடத் தெரிவிப்பு

🕔 January 25, 2023

டைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய சமாானக் கூட்டமைப்பு எந்தவொரு தரப்பினருடனும் கூட்டணியமைத்து போட்டியிடவில்லை என, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை உட்பட நாட்டில் சில மாவட்டங்களில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தனது வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.

அந்த வகையில், எந்த கட்சியுடனோ அல்லது குழுக்களுடனோ ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு இணைந்து – எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் போட்டியிடவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை கொழும்பு மாநகர சபையில் கடந்த தேர்தலில் பெற்றுக் கொண்ட ஆசனங்களை விடவும் அதிக ஆசனங்களை தங்களால் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள சில உள்ளூராட்சி சபைகளிலும் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தனது வண்ணத்துப்பூச்சி சின்னத்தில்தனித்தே போட்டியிடுவதாகவும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்