இலங்கையில் 81 பறவையினங்களுக்கு அச்சுறுத்தல்

🕔 January 23, 2023

னித நடவடிக்கைகளால் நாட்டில் மொத்தம் 81 பறவை இனங்கள் ‘அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக’ பட்டியலிடப்பட்டுள்ளனதாக, சுற்றுச்சூழல் அமைச்சின் பல்லுயிர் பெருக்க செயலக பணிப்பாளர் திருமதி ஆர்.எச்.எம்.பி. அபேகோன் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிற தரவுப் புத்தகத்துக்காக, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது, ‘முக்கியமாக அழிந்து வரும்’ (CR), ‘அழிந்து வரும்’ (EN), ‘அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ள’ (NT) மற்றும் ‘பாதிக்கப்படக்கூடிய’ (VU) பட்டியல் தயாரிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் 19 பறவை இனங்கள் ‘முக்கியமாக அழிந்து வரும்’ பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 48 பறவை இனங்கள் அழிந்து வருபவையாகவும், 31 பறவை இனங்கள் அச்சுறுத்தலுக்கு அருகிலிருக்கும் பறவைகளாகவும், 14 பறவையினங்கள் பாதிக்கப்படக்கூடியவை எனவும் பட்டியலிடப்பட்டுள்ளன.

வாழ்விடங்களை மனிதன் அழிப்பதன் காரணமாக பறவைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

தேசிய சிவப்பு பட்டியல் என்பது – அழிந்து வரும் மற்றும் அரிய வகை தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூஞ்சைகள் மற்றும் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் சில உள்ளூர் கிளையினங்களைப் பதிவு செய்யும் பொது ஆவணமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்