நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: ஓய்வுபெற்ற மேஜருக்கு 04 வருட சிறை

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில், ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னாவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் இன்று (24) இந்த தீர்ப்பை வழங்கியது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 03 லட்சம் ரூபா அபராதமும் இவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஜனவரியில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.