டயானா கமகேயின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்று தீர்மானம்

🕔 November 28, 2022

சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) தீர்மானித்துள்ளது.

இதன்படி, ராஜாங்க அமைச்சர் டயானா கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப தீர்மானித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு மற்றுமொரு உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம், டயானா கமகேயின் குடியுரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பணித்துள்ளது.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணைக்கு அனுமதியளித்து, நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்