காட்டு விலங்குகளால் இவ்வருடம் அரையாண்டில் மட்டும், 03 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான உணவுப் பயிர்கள் அழிவு

🕔 November 28, 2022

காட்டு விலங்குகளால் இவ்வருடம் முதலாவது அரையாண்டில் 144,989 மெட்ரிக் தொன் நெல் மற்றும் 93 மில்லியன் தேங்காய்கள் உட்பட 28 உணவுப் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன.

வன விலங்குகளால் விவசாய நிலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்த ஆய்வு அறிக்கையிலேயே இது தெரியவந்துள்ளது.

வன விலங்குகளால் அழிக்கப்பட்ட உணவுப் பயிர்களின் பெறுமதி 30,215 மில்லியன் ரூபா என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதனையடுத்து வன விலங்குகளால் தோட்டங்களுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்கும், யானை – மனித மோதல்களைத் தடுப்பதற்கும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமிக்க வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் இந்த நடவடிகை மேற்கொள்ளப்படவுள்ளது.

Comments