மின் கட்டணம் மீண்டும் உயர்கிறது; அதிகரிப்பை தவிர்க்க முடியாது என்கிறார் அமைச்சர்

🕔 November 26, 2022

மின் கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் செயற்பட முடியாது என நேற்று வெள்ளிக்கிழமை (25) நாடாளுமன்றில் உரையாற்றிய போது ஆவர் கூறினார்.

“யார் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், யார் ஆட்சியை நடத்தினாலும், மீண்டும் மின் கட்டண உயர்வை தவிர்க்க முடியாது.

2022 இல் பெய்த மழை, 2023 இல்பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

24 மணி நேரமும் வழங்க – ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ. 56.90 செலவாகிறது. இருப்பினும் நாங்கள் இன்னும் ஒரு யூனிட்டுக்கு 29ரூபாவையே அறவிடுகிறோம். இது நஷ்டம். எங்களுக்கு எரிபொருள், நிலக்கரி மற்றும் உலை எண்ணெய் ஆகியவை தேவை. அவற்றை யாரும் இலவசமாக வழங்குவதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் மின் கட்டணம் 75 சதவீதம் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்