பசில் நாடு திரும்பிய நிகழ்வுக்கான சிற்றுண்டிக்கு, தாம் கட்டணம் செலுத்தவில்லை என, விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவிப்பு

🕔 November 25, 2022

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பிய தினத்தில், விமான நிலையத்தினுள் நடைபெற்ற எந்தவொரு வைபவத்துக்காகவும், தாம் – ஒரு சதம் கூட செலவிடவில்லை என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை அதி முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் வழியால், பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார்.

இதன்போது அவரை வரவேற்க பொதுஜன பெரமுன அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.

அந்த நிகழ்வில் வழங்கப்பட்ட சிற்றுண்டிகளுக்கான கட்டணம் எதனையும், விமான போக்குவரத்து அதிகார சபை செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்