இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 40 பேர் பலி

🕔 November 21, 2022

ந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவிலும் உணர முடிந்தது. இதன் காரணமாக அங்கு உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அங்கு பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் நிலநடுக்கம் மேலும் ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நில நடுக்கத்தில் பலரின் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்ததை சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மூலம் காண முடிகிறது.

இடிந்து விழுந்த கட்டடங்களில் இருந்து மக்களை வெளியேற்ற மீட்புக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்