கஞ்சா தோட்டங்கள் தொடர்பில், பொலிஸ் போதைப் பொருள் பணியகம் தகவல்

🕔 November 21, 2022

ஞ்சா ஏற்றுமதி செயல்முறை குறித்து அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, கஞ்சா தோட்டங்கள் மீதான சுற்றி வளைப்புகள் மற்றும் சோதனைகள் தொடரும் என்று பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தெரிவித்துள்ளது.

ஏற்றுமதிக்கான பயிராக கஞ்சாவை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழுவை நியமிக்க சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

இருப்பினும், இது தொடர்பாக முறையான பரிந்துரை வழங்கப்படும் வரை சோதனைகளை நிறுத்த முடியாது என பொலிஸ் போதைப்பொருள் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. தோட்டங்களை சுற்றிவளைத்து அழித்தமை தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கேள்வியெழுப்பப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ உத்தரவுகள் வெளியிடப்படாமலோ அல்லது நிபுணர் குழு நியமிக்கப்படாமலோ கஞ்சா தோட்டங்கள் மீதான சுற்றிவளைப்புகள் நிறுத்தப்படாது எனவும் அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்