தலைப்புச் செய்திகள்

குரங்கம்மையினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டார்: இருவருமே துபாயிலிருந்து நாடு திரும்பியோர்

குரங்கம்மையினால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் இன்று (09) கண்டறியப்பட்டுள்ளார்.

குறித்த நோயாளி தேசிய தொற்று நோய் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நோயாளி கண்டறியப்பட்டதன் மூலம், இலங்கையில் குரங்கம்மை நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

இவர் துபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில், குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் குரங்கம்மையினால் முதன் முதலாகப் பாதிப்புற்றவரும், துபாயிலிருந்து நாடு திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.