பாடசாலை மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்றதாகக் கூறப்படுபவர் மருதமுனையில் கைது

🕔 November 7, 2022

– பாறுக் ஷிஹான் –

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் தொடர்பில் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த நேற்று முன்தினம் சனிக்கிழமை (5) இரவு மருதமுனை அல்மனார் வீதியில் வைத்து   சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

இவ்வாறு கைதான நபர் மருதமுனை 2ஆம் பிரிவைச் சேர்ந்த  28 வயது மதிக்கத்தக்கவரவார்.   

இவர் வசமிருந்து ஐஸ் போதைப்பொருள் 4.35 கிராம் மற்றும் சந்தேக நபர் பாவித்த கைத்தொலைபேசி  ஆகியவற்றை அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்கள், பெரிய நீலாவணை  பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்பட்டது.

Comments