துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

🕔 October 31, 2022

ஹிக்கடுவ – திரணகம சந்தியில் இன்று (31) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் பைக்கில் வந்த இருவர் ரி56 துப்பாக்கியினால் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 32 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய விசேட குற்றச்செயல்களை தடுப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் தென் மாகாணத்தில் புதிய பொலிஸ் பிரிவும் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்