தலைப்புச் செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட அமரகீர்த்தி எம்.பி குடும்பத்துக்கு, 01 கோடி ரூபா நஷ்டஈடு வழங்க தீர்மானம்

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள குடும்பத்துக்கு 01 கோடி ரூபா நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில இன்று (21) இதனைத் தெரிவித்தார்.

மே மாதம் 09 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரும் நிட்டம்புவில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் இதன்போது தெரிவித்தார்.