தலைப்புச் செய்திகள்

பேஸ்புக் பதிவு தொடர்பில் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, சிஐடிக்கு முறைப்பாடு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு தன் மூலம், விஷேட சிகிச்சைகள் வழங்கப்படுவதாக பேஸ்புக் – இல் வெளியிடப்பட்ட பதிவு தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சிஐடி) நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முறைப்பாடு செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில், இந்தக் குற்றசாட்டை மறுத்துள்ள நீதி அமைச்சர், இது நீதித்துறை உட்பட முழு சட்ட அமுலாக்கல் துறையினையும் கேலி செய்து, அவமதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான தவறானதும் தீங்கிழைக்கும் வகையிலானதுமான பதிவு – முழு சட்ட அமைப்புக்கும் கடுமையான தப்பெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி, மேலதிக நடவடிக்கைகளுக்காக கோட்டை நீதவானிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவினரை வேண்டியுள்ளார்.