பிரித்தானிய பிரதமர் பதவியேற்று 45 நாட்களில் ராஜிநாமா

🕔 October 20, 2022

பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 5-ம் திகதி பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவவியான அவர் – பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார்.

இதுவரை எந்த பிரித்தானி பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி விலகியதில்லை.

எனவே, இவரது பிரதமர் பதவிக் காலம்தான் வரலாற்றிலேயே மிகக் குறுகிய பிரித்தானிய பிரதமர் பதவிக் காலமாக உள்ளது.

தனது பதவி விலகல் குறித்துப் பேசிய லிஸ் டிரஸ், தான் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அரசர் சார்லசிடம் கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது பிரிட்டன் அரசியலின் மிகப் பெரிய குழப்பமாகப் பார்க்கப்படுகிறது.

லிஸ் டிரஸ்சுக்கு அடுத்து ஒருவர் – பதவி ஏற்றால் இந்த ஆண்டின் மூன்றாவது பிரித்தானிய பிரதமராக அவர் இருப்பார்.

Comments