தலைப்புச் செய்திகள்

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்: 54 பேரில் 9 பேர் மட்டுமே சிறுபான்மையினர்

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் கோபா எனும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பத்தின் போது சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இந்தக் குழுக்களுக்கான பெயர் விபரங்களை சபைக்கு அறிவித்தார்.

இதன்படி கோப் குழுவுக்கு 27 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். குறித்த குழுவுக்கு சிறுபான்மை உறுப்பினர்கள் ஐவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி ரஊப் ஹக்கிம், எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், ராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் எஸ்.எம்.எம். முஸாரப் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கோபாவுக்கும் 27 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதில், சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

அதன்படி காதர் மஸ்தான், சுரேன் ராகவன், கபிர் ஹாசிம் மற்றும் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கோப் குழு உறுப்பினர்கள் விவரம்

கோபா குழு உறுப்பினர்கள் விவரம்