பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்த வழக்கு: அநீதியாக 13 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டவர் விடுதலை

🕔 October 1, 2022

தினைந்து வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த வழக்கில் 13 ஆண்டுகள் அநீதியாக சிறையில் இருந்தவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எஹலியகொடவைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மேற்படி நபர் கைது செய்யப்பட்டார்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், தலையில் அடித்து கொலை செய்யப்பட்டதோடு, உடல் மலைப் பகுதியில் போடப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளின் போது அப்பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த ஒருவரைக் கைது செய்யப்பட்டார். பின்னர் பாதிக்கப்பட்டவரின் டிஎன்ஏ பரிசோதனையைத் தொடர்ந்து, சந்தேக நபர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.

சிறிது காலத்திற்குப் பிறகு சந்தேக நபருக்கு பிணை கிடைத்த போதிலும், அவரைப் பிணையெடுக்க யாரும் முன்வராததால் சந்தேக நபர் சிறையில் இருக்க வேண்டியேற்பட்டது.

இது இவ்வாறிருக்க, 90 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதன் மூலம், பாடசாலை மாணவியின் கொலையின் பின்னணியில் இருந்த உண்மையான சந்தேக நபர் யார் என்பது தெரியவந்துள்ளது.

90 வயது பெண்ணைக் கொலை செய்தமை தொடர்பில் க செய்யப்பட்ட நபர் பிரேமசிறி சேனாநாயக்க என அடையாளம் காணப்பட்டார். அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்ட போது, பாடசாலை மாணவி தொடர்பில் முன்னர் விளக்க மறியலில் இருந்த நபரிடம், தான்தான் பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்து கொலை செய்ததாக கூறியிருந்தார்.

இதனைகக் கேட்ட மற்றுமொரு கைதி – சிறையிலிருந்து விடுதலையானதைத் தொடர்ந்து, எஹலியகொட பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து அறிவித்துள்ளார்.

15 வயதுடைய பாடசாலை மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பிரேமசிறி சேனாநாயக்க என்பவரே சந்தேகநபர் என்பதை புதிய விசாரணைகளும், டிஎன்ஏ பரிசோதனைகளும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரேமசிறி எனும் 39 வயதுடைய சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவத்தின் போது அவருக்கு 26 வயதாகும்.

இவர் பாடசாலை மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்